கோவையில் ஆம்னி பேருந்தில் தீ விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கோவையில் ஆம்னி பேருந்தில் தீ விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
X

Coimbatore News- ஆம்னி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Coimbatore News- கோவையில் ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

Coimbatore News, Coimbatore News Today,- திருவண்ணாமலையில் இருந்து ஆகாஷ் டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பேருந்து நேற்றிரவு கோவைக்கு கிளம்பியது. 30 பயணிகளுடன் வந்த அந்த பேருந்து கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.எம்.சி.ஹெச். என்ற தனியார் மருத்துவமனை அருகே வந்த போது திடீரென தீப்பற்றியது. உடனடியாக சுதாரித்த ஆம்னி பேருந்து ஓட்டுனர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டார். பயணிகள் அனைவரும் வாகனத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நிலையில் தீ, ஆம்னி பேருந்து முழுவதும் பரவியது. கொளுந்து விட்டு எரிந்த தீயினால் பேருந்து முழுமையாக எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு தீயணைப்பு துறையினர் தீயை முழுமையாக அணைத்தனர். அதற்குள் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்தின் டீசல் டேங்கில் ஏற்பட்ட கோளாறு மற்றும் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பயணிகள் பத்திரமாக வேறு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாலையில் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!