ஆதீனங்களை மிரட்டி பாஜகவினர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் : பி.ஆர்.நடராஜன் எம்.பி குற்றச்சாட்டு
Coimbatore News- கோவைத்தொகுதி எம்பி. பி.ஆர்.நடராஜன்
Coimbatore News, Coimbatore News Today- கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள வி.கே.கே மேனன் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனின் 5 கால மக்கள் பணிகளின் தொகுப்பு குறித்த நூல் வெளியீட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிபிஎம் கட்சியினர் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு, கோவையின் மேன்மைக்கான பணிகளில் தோழர் பி.ஆர்.நடராஜன் என்ற நூலை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசும் போது, கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த கோவை மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத்தில் ஆதீனங்களை அழைத்து அவர்கள் கையால் செங்கோல் பெற்றுக் கொண்டு பிரதமர் மரியாதை செலுத்தினால், தமிழ்நாட்டில் ஆதீனங்களை மிரட்டி பாஜகவினர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.
அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் மீதான அமலாக்கத்துறை வழக்குகளை ரத்து செய்ய 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அமலாக்கத்துறை வழக்குகள் உள்ள 78 நபர்களின் விவரங்கள் இருந்ததாகவும், அமலாக்கத்துறை உயரதிகாரிகள் சொல்லாமல், அவர்களது பங்கு அதில் இல்லாமல் ஒரு சாதாரண அதிகாரியால் எப்படி லஞ்சம் கேட்க தைரியம் வரும் எனவும் கேள்வி எழுப்பிய அவர், சூழல் இப்படி இருக்க அண்ணாமலை மேடை போட்டு லஞ்சத்தை ஒழிக்கப் போவதாக பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றார். கோவையில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கோவையில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்வரும் நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu