ஸ்டாலின் பெரும் முயற்சியால் இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது; அமைச்சர் முத்துசாமி பெருமிதம்
Coimbatore News- கோவையில் திமுக முப்பெரும் விழா குறித்து ஆய்வு நடத்திய அமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள்.
Coimbatore News, Coimbatore News Today- கோவை கொடிசியா மைதானத்தில் 15 ந்தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய விழாக்கள் நடைபெற உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு பணிகளை அமைச்சர் சு.முத்துச்சாமி துவக்கி வைத்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைவரின் பெரும் முயற்சி காரணமாக இந்தியா முழுவதும் அருமையான கூட்டணி அமைக்கப்பட்டது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கிறது. பாஜக மத்தியில் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் உள்ளனர். இவ்வளவு பெரிய கூட்டணி அமைவதற்கு முதல்வர் தான் காரணம்.
தமிழ்நாட்டில் 40 இடங்களையும் பாண்டிச்சேரி சேர்த்து திமுக கூட்டணி வெற்றி பெறும் என முதல்வர் கூறினார். மக்களுடைய பணிகளை நாங்கள் செய்துள்ளோம். அந்த நம்பிக்கையில் இந்த வாக்குறுதிகளை கொடுக்கிறேன் என முதல்வர் தெரிவித்தார். சட்டதிட்டங்களுக்கு மாறாக வாக்குகளை பெறுவதற்கு எந்த முயற்சியும் எங்களுடைய கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் எடுக்கவில்லை. வட மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. நம்முடைய தமிழ்நாட்டில் வலுவாக இருந்தும் எந்தவிதமான சின்ன அசம்பாவிதம் கூட இல்லாமல் இந்த தேர்தலில் நடத்தி முடித்துள்ளோம். மக்கள் மிகப் பெருவாரியான வாக்குகள் கொடுத்துள்ளார்கள். மூன்று ஆண்டுகளில் முதல்வர் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிலைத்து நின்றுள்ளது. இதுதான் முக்கியமான வெற்றிக்கு காரணம்.
மக்களிடம் திமுக திட்டங்களிடம் கொண்டு சென்றதன் காரணமாக மாபெரும் வெற்றியை நாம் மக்கள் நமக்கு கொடுத்துள்ளார். எந்த கண்டத்தில், எங்கேயும் நடக்காத மாபெரும் வெற்றியாக இது அமைந்துள்ளது. அதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்பது தளபதியுடைய எண்ணமாக இருந்தது. ஒவ்வொரு இடமாக போய் இடமாக சென்று நன்றி சொல்ல வேண்டும். ஆனால் சட்டமன்றம் நடக்கின்ற காரணத்தினால் முதலில் ஒருங்கிணைத்து ஒரு கூட்டத்தை போட்டு மக்களுக்கு நன்றியை தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
அதன் பிறகு மற்ற பயணங்களை முடிவு செய்யலாம் என்று அந்த நன்றி அறிவிப்பு கூட்டம் கோவை மாவட்டத்தில் நடக்க வேண்டும் என்று தளபதி அவர்கள் விருப்பப்பட்டு ஒரு வாய்ப்பை நமக்கு கொடுத்துள்ளார்கள். அதற்கு காரணம் மேற்கு மண்டலம் பலபேர் பேசியிருந்தார்கள் இன்று மேற்கு மண்டலம் மொத்தமாக திமுக கையில் இருக்கிறது. கோவை மாவட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக இந்த முப்பெரும் விழா அமைந்துள்ளது” என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu