ஜிஎஸ்டியில் பல குளறுபடிகள் இருக்கின்றன : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டியில் பல குளறுபடிகள் இருக்கின்றன : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
X

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

ஒன்றிய அரசின் மனம்பான்மை சரியாக இருக்க வேண்டும். மிகவும் வேகமாக இதில் உள்ள தவறுகளை சரி செய்ய வேண்டும்.

கோவை டைடல் பார்க்கில் அமைச்சர் பி்.டி.ஆர் பழனிவேல் ராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல காரணங்களால் எல்கார்ட் கட்டிடம் 4 ஆண்டுகளாக தாமதம் ஆனது. சுமார் 2 லட்சம் சதுர அடியில் 6 அடுக்குகளாக பல தடைகள், திட்டமிடுதல்களில் இருந்த குறைகளை தாண்டி கட்டிடம் நிறைவடைந்து இருக்கிறது.விரைவில் இரு வாரங்களில் இந்த கட்டிட்டம் முதல்வரால் திறத்து வைக்கப்படும்.இத்தகைய அலுவலகங்களுக்கு கோவையில் தேவை அதிகம் இருக்கிறது.

2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டிருந்தாலும் 6, 7 லட்சம் சதுர அடிக்கு கோரிக்கை இருக்கிறது. ஒருவருக்கு மட்டும் கூடுதல் பங்கு இல்லாமல், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையிலும் குத்தகை வழங்கப்படும்.கோவையில் இருக்கும் மிகப்பெரிய துறை இது. பல காரணங்களால் கட்டிடம் தாமதம் ஆனாலும், உரிய விதிமுறைகள் சான்றிதழ் பெற்று திறக்க இருக்கின்றோம்.

சாதாரணமாக 3250 பேருக்கு அதிகமாக வேலை கிடைக்கும். ஒரு சில நிறுவனங்கள் முழுமையாக இடத்தை கேட்கின்றனர். ஆனால் அது நியாயமாக இருக்காது. விதிமுறை உருவாக்க கோரி இருக்கிறேன். 15 ஆயிரம் சதுர அடியாவது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என சொல்லியிருக்கிறேன். ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணியும் நடந்து கொண்டு இருக்கின்றது. பிப்ரவரி மாதம் ஒரு கருத்தரங்கில் நிதி துறையில் சீர்திருத்தம் செய்த மாதிரி, தகவல் தொழில்நுட்பத் துறையில் சீர் திருத்தம் செய்யவே என்னை அனுப்பி இருப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.‌தகவல் தொழில்நுட்ப துறையில் சில இடங்களில் அப்ரோச்சில் திருத்தம் தேவைபடுகின்றது. அரசில் உள்ள துறைகள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்காமல் சில மாற்றங்கள் செய்யபட வேண்டும்.

வட சென்னை, ஓசூர் கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கபடுகின்றது. இரு ஆண்டுகளுக்கு முன்பே நிதி நிலை அறிக்கையில் இதை கூறி இருக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.ஜிஎஸ்டி மற்றும் கிரீம் பன் விவகாரம் குறித்த கேள்விக்கு, வேறுதுறையில் இருப்பதால் ஜிஎஸ்டி பற்றி பேச விரும்ப வில்லை. பொதுவாக ஜிஎஸ்டி பற்றி அறிக்கை போல கடிதம் ஒன்றை நிதி அமைச்சருக்கு கொடுத்து இருக்கின்றோம்.‌GST குறித்த திட்டமிடுதலில் உள்ள பல விளைவுகளை இது ஒரு சின்ன உதாரணம்தான். திட்டமிடுதலில் பல குளறுபடிகள் இருக்கின்றன. ஒன்றிய அரசின் மனம்பான்மை சரியாக இருக்க வேண்டும். மிகவும் வேகமாக இதில் உள்ள தவறுகளை சரி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself