கோவையில் திமுக முப்பெரும் விழா ஏற்பாடுகள்: அமைச்சர் முத்துசாமி ஆய்வு

கோவையில் திமுக முப்பெரும் விழா ஏற்பாடுகள்: அமைச்சர் முத்துசாமி ஆய்வு
X

கோவையில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

கோவை கொடிசியா மைதானத்தில் 15 ந்தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு செய்தார்.

கோவையில் வருகின்ற 15 ம் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவை கொடிசியா மைதானத்தில் 15 ந்தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர், மூத்த அமைச்சர்கள் மற்றும் திமுக எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர் அந்த இடத்தில் அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழக முதல்வர் முப்பெரும் விழாவினை கோவையில் நடத்த அனுமதி அளித்து உள்ளார். தமிழ்நாடு மக்கள் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அளித்து உள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா நடந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர, கட்சி சார்பில் வெற்றி பெற திட்டம் வகுத்து வழி நடத்திய கழக தோழர்களுக்காகவும் விழா நடத்தப்படுகிறது. இந்த முப்பெரும் விழாவை கோவையில் நடத்த கேட்டுக்கொண்டோம்.

அதனால் தான் இங்கு நடக்கிறது. அதன்படி, வரும் 15-ம் தேதி, சனிக்கிழமை மாலையில் கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரும், தோழமை கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்திய அளவில் இவ்வளவு பெரிய வெற்றியை மக்கள் அளித்து உள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தேசிய கட்சி தலைவர் வருகை குறித்து இதுவரை தகவல் இல்லை” என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!