கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு..!

கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு..!
X

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

கோவையில் நேற்று மாலை, கன மழை பெய்தது. இதனை அடுத்து சாலைகளில் மழை நீர் வழிந்து ஓடியது. அங்குள்ள கால்வாய் ஒன்றில் குப்பைகள் அடைத்து இருந்தது. உடனடியாக ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த குப்பைகளை வெளியே எடுத்து மழை நீர் போக வழி வகுத்தனர். மேலும் நஞ்சுண்டாபுரம் பகுதியில் திருச்சி சாலை அடுத்த, கதிரவன் கார்டன் பகுதியில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

அங்குள்ள அதிகாரிகளிடம் மழை நீர் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அதே பகுதியில் மாநகராட்சி சார்பாக மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள சாலைகளில் மாநகராட்சி ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு உடனடியாக பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்யும் தகவல் அறிந்து அங்கு வந்த கதிர்வன் கார்டன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சரை வலியுறுத்தினர். மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியதை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாக கதிரவன் கார்டன் பகுதிக்குள் சென்று தெருக்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டார்.

மேலும் உடனடியாக இந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். சங்கனூர் ஓடை முழுமையாக தூர்வாரப்படாமல் இருப்பதால், மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிக்குள் புகுவது வாடிக்கையாக இருப்பதாகவும், குப்பை கூளங்களுடன் மருத்துவ கழிவுகளும் தெருக்களுக்குள் புகுந்து விடுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!