வீட்டில் 40 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் திருட்டு: கோவையில் பரபரப்பு

வீட்டில் 40 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் திருட்டு: கோவையில் பரபரப்பு
X

மாதிரிப்படம்

கோவையில், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, 40 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரில், குடும்பத்துடன் வசித்து வருபவர் மாரியப்பன் (57). ஒண்டிபுதூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த 23ம் தேதியன்று குடும்பத்துடன் அவரது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுவிட்டு இன்று வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்ற பார்த்த போது, வீட்டில் இருந்த 40 பவுன் நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கைரேகை நிபுணர்களை வரவழைத்தும், மோப்ப நாய்களை கொண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!