கொடிசியாவில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சி துவக்கம்..!
சர்வதேச ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சி
கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் இன்று 14-வது சைமா டெக்ஸ்ஃபேர் கண்காட்சி ஜவுளி இயந்திரங்கள், உதிரி பாகங்கள் மற்றும் துணைக் கருவிகளின் சர்வதேச கண்காட்சி துவங்கியது.இந்த கண்காட்சியானது இன்று முதல் 24-ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 6 வரை நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சி மூலம் 1500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இருந்து சுமார் 10,000 பேர் முதல் நாளில் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். இந்தியாவிலிருந்து குஜராத், மத்திய பிரதேஷ், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், இத்தாலி, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்கள் கண்காட்சியில் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சியில் 240 ஜவுளி இயந்திரங்கள், உதிரி பாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் 260 ஸ்டால்கள் அமைத்து பொருட்களை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி பொருட்களுக்கு மாறாக உள்நாட்டில் குறைந்து விலையில் இயந்திரங்களையும், உதிரிபாகங்களையும் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி நோக்கம் என்றும் இதற்கு நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது எனவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu