தொழில்துறை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் : கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. உறுதி..!

தொழில்துறை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் : கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. உறுதி..!
X

கே.ஆர். ஜெயராம் வாக்கு சேகரிப்பு

தொழில் துறையினரின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கோவை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் சிறு தொழில் முணைவேர்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் நிம்மதியாக தொழில்கள் நடந்ததாகவும், தற்போது மின் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பிரச்சனைகளால் தொழில்கள் முடங்கியுள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமிடம் தொழில்துறையினர் வேதனை தெரிவித்தனர். தொழில் துறையினரின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவராம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் வீடுவீடாக சென்று சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். பொதுமக்களின் குடும்பத்தில் ஒருவராக அவர்களின் நலன்களை கனிவுடன் விசாரித்தும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் அடிதட்டு மக்களின் தேவைகளை கேட்காமலே அனைத்தையும் செய்து கொடுத்துள்ளதாகவும் கூறி கே.ஆர். ஜெயராம் வாக்குகளை சேகரித்தார்.

அதிமுக செய்யப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்த அவர், பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதேபோல பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!