கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; மாலை 5 மணிக்கே கடைகள் அடைப்பு

கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; மாலை 5 மணிக்கே கடைகள் அடைப்பு
X

மாலை 5 மணிக்கு அடைக்கப்பட்ட கடைகள்.

கோவையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரங்கேகவுடர் வீதி, டி.கே.மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபடும் 300க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் அடைக்கப்பட்டன.

இதே போல ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, ஆர்.எஸ்.புரம் உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள துணிக்கடைகள், நகைகடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையகம் உட்பட அனைத்து கடைகளும் மாலை 5 மணியுடன் அடைக்கப்பட்டன.

அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மருந்து கடைகளை தவிர பிற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளான இன்று மாலை 5 மணியுடன் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

இதன் காரணமாக மாலை நேரத்தில் பொருட்கள் வாங்குவதற்காக ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்ததால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags

Next Story