ஜிஎஸ்டியினால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன : கணபதி ராஜ்குமார் குற்றச்சாட்டு..!

ஜிஎஸ்டியினால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன : கணபதி ராஜ்குமார் குற்றச்சாட்டு..!
X

கணபதி ராஜ்குமார் வாக்குசேகரிப்பு


ஜிஎஸ்டியால் தொழில்துறையினரும், சிறு குறு தொழில்துறையினரும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.

கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய வேட்பாளர் கணபதி ராஜ்குமார், “வரக்கூடிய 19ம் தேதி இந்த நாடாளுமன்ற தேர்தலில் பொருத்தவரைக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். என்ன காரணம் என்று கேட்டால்? கொடுத்து அழகு பார்த்தது திராவிட முன்னேற்ற கழகம், கொடுப்பதை தடுப்பது பாரதிய ஜனதா கட்சி, இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் ஏதோ செய்தது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இன்று பொதுமக்கள் அனைவரும் இன்று நல்ல திட்டங்களை கொடுத்து பொதுமக்களுக்கு அழகு பார்த்துக் கொண்டிருப்பது திராவிட மாடலின் தந்தை முதலமைச்சர் அவர்கள்.

திராவிட மாடல் அரசு மகளிர்க்கு இலவச பேருந்து, கலைஞர் உரிமை தொகை மற்றும் அரசு பள்ளிகளில் படித்து வரும் கல்லூரி மாணவர்களுக்கு மாத ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் பாஜக குறித்து சொல்ல வேண்டும் என்றால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டியால் தொழில்துறையினரும், சிறு குறு தொழில்துறையினரும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர். கோவை மாவட்டத்தில் சிறு குறு தொழிற்சாலைகளால் பொருளாதாரம் நன்றாக இருந்தது.

எப்பேர்பட்ட கோவையாக இருந்தது? வளமான கோவையாக இருந்தது. பணம் புழக்கம் இப்போது குறைந்து விட்டது. அதனால்தான் முதல்வர் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தான், பெண்களுக்கு உரிமைத்தொகை உள்ளிட்டவைகள் வழங்கினார். எனவே தான் கொடுப்பவர்களுக்கும், தடுப்பவர்களுக்கும் ஏற்படும் யுத்தம் தான் இந்த தேர்தல். பாஜக நமக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். தமிழகத்தை பொறுத்த வரைக்கும் நமக்கு கொடுத்தது எல்லாம் விலைவாசி உயர்வு மட்டுமே. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இந்த தேர்தலில் வாக்களியுங்கள்.

அவர்கள் அதிக பொய் பேசுவார்கள். அதை செய்துவிட்டேன், இதை செய்து விட்டேன் என பொய் பேசுவார்கள். அதை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ளக்கூடாது. பிரதமர் ஒரு வாக்குறுதி கொடுத்தார் பெண்களின் வங்கி கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என சொன்னார். கொடுத்துட்டாரா? இப்படி கவர்ச்சிகரமான பொய்களை சொல்லிக்கொண்டு போவார்கள். அதனால் எதுவும் நடக்காது. நடக்கவும் விடமாட்டார்கள்.

இதுதான் இன்று இருக்கக்கூடிய நிலை. இந்தியாவில் 10 ஆண்டுகள் நடந்த அவருடைய ஆட்சி என செய்தார்கள் என எண்ண வேண்டும். இது எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு வரக்கூடிய தேர்தலை பொருத்தவரைக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தில் மறக்காமல் வாக்களிக்க வேண்டும்.

அதேபோல், அதிமுகவை பொறுத்தவரை அவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. எதற்காக தேர்தலில் நிற்கிறார்கள் என்றால், அவர்களுக்கும், பிஜேபிக்கும் ரகசிய உறவு இருக்கின்றது. தேர்தலுக்குப் பிறகு சேர்ந்து கொள்வார்கள். அதிமுக - பாஜகவின் கள்ள உறவு புரிந்துகொள்ளுங்கள், 10 ஆண்டுகளாக நாட்டை சீரழித்த பாஜக - அதிமுகவிற்கு இந்த தேர்தலில் பாடம் புகட்டுவோம். உதயசூரியனை வெற்றி பெற செய்வோம்” எனக் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!