கோவை ரேசன் கடைகளில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

கோவை ரேசன் கடைகளில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு
X

ரேசன் கடையில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

அமைச்சர் சக்கரபாணி கோவை மாநகர பகுதியில் இராமநாதபுரம், பூ மார்க்கெட், தெப்பக்குளம் மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுகின்றதா என திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கோவையில், இராமநாதபுரம், பூ மார்க்கெட், தெப்பக்குளம் மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தரமான பொருட்கள் வழங்கப்படுகின்றதா என ஆய்வு மேற்கொண்டார். பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் பேட்டியின்போது கூறுகையில், 15 ந் தேதி முதல் 13 வகையான பொருட்கள் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும். 11 ந்தேதி முதல் ஒவ்வொரு நியாய விலைக்கடைகளில் மூலம் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது. 15 ந் தேதி முதல், 2 ஆயிரம் பணமும், பொருட்களும் சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்களுக்கு சரியான படி நியாய விலைக்கடைகள் மூலம் பொருட்கள் சென்றடைகின்றதா என தமிழக முதல்வரின் ஆணைப்படி இந்த ஆய்வு நடைபெறுவதாகவும், இந்த ஆய்வின்போது, பொதுமக்களிடத்திலும், பொதுமக்களுக்கு முறையானபடி பொருட்கள் வருகின்றதா என ஆய்வு கேட்டறிந்தோம். தமிழக முதல்வர் பொறுப்பேற்றவுடன் உணவு துறைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து, புதிய அரிசி அட்டை தாரர்களுக்கும் நிவாரண தொகையும், பொருளும் வழங்கப்பட உள்ளது. நியாய விலைக்கடைகளில் புகார்கள் ஏதும் வந்தால் பாரபாட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!