கோவையில் ஒரே இடத்தில் 100 பானைகளில் பொங்கலிட்டு கொண்டாட்டம்.. திமுக கலை இலக்கிய அணி ஏற்பாடு...

கோவையில் ஒரே இடத்தில் 100 பானைகளில் பொங்கலிட்டு கொண்டாட்டம்.. திமுக  கலை இலக்கிய அணி ஏற்பாடு...
X

கோவை சிங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.

கோவையில் திமுக கலை இலக்கிய அணி ஏற்பாட்டில் ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பானைகள் வைத்து பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உழவர்களின் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும், உழைப்பை போற்றும் பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் திருநாள் என்பதால் உலகம் முழுவதும் பொங்கல் விழா பல்வேறு இடங்களில் இன்று கொண்டாடப்பட்டது.

ஜாதி, மத அடையாளங்களை விட்டு, அனைவரும் தமிழர்கள் என்ற அடைப்படையில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நிலையில், கோவை சிங்காநல்லூர் பகுதியில் திமுக கலை இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் தலைமையில் 100 மண் பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து அந்தக் கட்சியின் மகளிர் அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை சிங்காநல்லூர் பகுதி திமுக சார்பில், அந்தக் கட்சியின் கலை இலக்கிய அணி மாநில துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார், பகுதி செயலாளர் சாமி தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட மண் பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து திமுக மகளிர் அணியினர் கொண்டாடினர். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு "பொங்கலோ பொங்கல்" என முழக்கமிட்டு தை முதல்நாளை வரவேற்று, பொங்கல் திருநாளை கொண்டாடினர்.

ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பானைகள் வைக்கப்பட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அங்கு ஏராளமானோர் கூடினர். பொதுவாக வீடுகளின் முன்பு, நிறுவனங்களின் முன்பு மட்டுமே பொங்கல் பானை வைத்து கொண்டாடப்படும் நிலையில், ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பானைகள் வைத்து பொங்கலிட்டு கொண்டாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!