கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் ரத்த தான முகாம்

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் ரத்த தான முகாம்
X

கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட தி.மு.க, தளபதி இரத்ததான இயக்கம் சார்பில், கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வரதராஜபுரம் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் துவக்கி வைத்தார். இதில், 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். இரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட, பெரியகடை வீதி பகுதி திமுக சார்பில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி முப்பெரும் விழா உக்கடம் நல்லாயன் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் பேசுகையில், “ எந்தவித அரசியல் மாற்றங்கள் நடந்தாலும், குறிப்பாக கோட்டை மேடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் திமுகவிற்கு தொடர்ந்து ஆதரவுகள் கொடுத்து வருகின்றனர். திமுகவின் மூத்த முன்னோடிகள் இந்த பகுதி மட்டும் அல்ல பல்வேறு பகுதிகளில் உள்ள மூத்த நிர்வாகிகள் ஆதரவாக உள்ளனர். இந்த பகுதி திமுகவின் வலிமை மிக்க பகுதியாக உள்ளது என்பதை அறிந்து பெருமை படுகின்றேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 க்கு 40 திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார். தொடர்ந்து, 300 க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் வழங்கினார்.

Tags

Next Story
பெருந்துறையில் விவசாயிகளுக்கு ராபி பருவ பயிற்சி முகாம்..! புதிய விவசாய நுட்பங்கள் பரிசோதனை..!