கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன்புதிய பூங்கா
கோவை கிழக்கு மண்டலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 23க்கு உட்பட்ட பி.எம்.ஆர். லே அவுட் என்ற பகுதி உள்ளது. இங்கு 82 இலட்சம் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் பூங்காவினை துணை மேயர் வெற்றிச் செல்வன் முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பி.எம்.ஆர் லே-அவுட் பகுதியில் தனியார் அறக்கட்டளையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் முழு பங்களிப்புடன் சிறுவர் பூங்கா மற்றும் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இப்பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள், சோலார் மின்விளக்குகள் குடிநீர் வசதி, ஓய்வு அறை, சொட்டுநீர் பாசன வசதி மற்றும் நடைபாதை உள்ளிட்டவை உள்ளன. இது அப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu