மாநகராட்சி பள்ளிக்கு ஆண்ட்ராய்டு செயலி: மாநகராட்சி ஆணையர் துவக்கி வைப்பு
ஆண்ட்ராய்டு செயலியை துவக்கி வைத்த கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா.
சென்னையை சேர்ந்த myschooldiary.net என்ற தனியார் நிறுவனம் பள்ளிகளுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலியை கோவை மசக்காளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கு வழங்கியுள்ளது. இந்த செயலியை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால்சுங்கரா இன்று துவக்கி வைத்தார்.
மாநகராட்சி பள்ளி ஒன்றில் இந்த வசதி ஏற்படுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த செயலியை முழுமையாக பயன்படுத்துவதில் தான் வெற்றி இருப்பதாக மாநகராட்சி ஆணைராளர் ராஜாகோபால்சுங்கரா தெரிவித்தார். செயலியின் பயன்பாட்டை பொருத்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இதனை செயல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த செயலி குறித்து இந்நிறுவன தலைமை நிர்வாக இயக்குநர் ராஜ்மோகன் கோவிந்தராஜ் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கூறுகையில், ஆசிரியர்கள் பெற்றோர்கள் இந்த செயலி மூலம் எளிதாக உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடியும். பள்ளி தலைமை ஆசிரியர் வகுப்பாசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய வீட்டு பாட அறிவிப்புகள் மற்றும் இதர செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் மாணவர்கள் அனுப்பும் வீட்டு பாடங்கள் கூகுள் டிரைவ் மூலம் சேமிக்கப்படுவதால் ஆண்டு முழுவதும் பெறப்பட்ட தகவல்களை பத்திரமாக வைத்து கொள்ள முடியும். தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பருவ இறுதி மதிப்பிடு போன்ற விவரங்கள் எல்லா நேரமும் பெற்றோர்களுக்கு கிடைக்கபெரும். மதிப்பெண் பற்றிய பதிவுகளை திரும்ப திரும்ப எழுதும் பணி சுமை ஆசிரியர்களுக்கு குறையும் என்றனர்.
இந்த செயலியை செல்போன் வழியாகவும் கணினி வழியாகவும் இணைய தளத்திலும் ஆசிரியர் மாணவர்கள் இயக்க முடியும் என்று கூறிய அவர்கள் தற்போது வரை 500 மாணவர்களின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu