ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா தொற்று

ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா தொற்று
X

கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி

தகரச்சீட்டுகளைக் கொண்டு அடைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இருந்த போதும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கோவையில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கோவையில் கொரோனா பாதிப்பு 22 சதவிகிதம் குறைந்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து வீதிவீதியாக சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மேற்கு புதூர் பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 658 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் சுமார் 50 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தகரச்சீட்டுகளைக் கொண்டு அடைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags

Next Story