சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் திமுக- எம்.எல்.ஏ. பேச்சு

சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் திமுக- எம்.எல்.ஏ. பேச்சு
X
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் கார்த்திக் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன் திமுக என்று தெரிவித்தார்.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக நா.கார்த்திக் போட்டியிடுகின்றார். தீவிரம் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், உக்கடம் அருகே ஜிஎம்.நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தவர், பொதுமக்கள் முன்னிலையில் பேசும் போது,

"இந்த பகுதியில், தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பல்வேறு பணிகளை செய்திருந்தாலும், எதிர்கட்சி எம்எல்ஏ என்பதால், ஒரு சில பணிகள் செய்ய முடியாமல் இருந்தது. தற்போது, திமுக மாபெரும் வெற்றியடைந்து முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமர உள்ளார்.

அதன்பிறகு, இந்த பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும். ஏற்கனவே, இருந்த திமுக ஆட்சி காலத்தில் தான் வீட்டு மனைகள் வரைமுறைப்படுத்தப் பட்டது என கூறியவர்,

இந்த பகுதியில் இஸ்லாமியர்கள் பெருமான்மையாக உள்ளனர். திமுக எப்போதும் சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக உள்ளது என்று கூறினார். சிஏஏ சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. இதை ஆதரித்தது அதிமுக என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் இந்த அரசை தூக்கி எறியும் நாள் தான் ஏப்ரல் 6 ந்தேதி. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வையுங்கள்" என்று கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!