வேளாண் சட்டத்தில் அதிமுகவுக்கு பங்கு-ஸ்டாலின்

வேளாண் சட்டத்தில் அதிமுகவுக்கு பங்கு-ஸ்டாலின்
X

அதிமுக ஆதரிக்கவில்லை எனில் வேளாண் திருத்த சட்டங்கள் வந்திருக்காது என கோவையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

கோயமுத்தூர் நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சியினரிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்துப் பேச வேண்டும். ஏப்ரலில் சட்டமன்ற தேர்தல் வந்துவிடும். பழனிச்சாமி ஆட்சியை தூக்கி எறிய தயாராக இருப்பீர்கள். திமுக தான் மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் என்ற உணர்வோடு மக்கள் இருக்கின்றனர். கொரோனாவிலும் கொள்ளையடித்த ஆட்சி இது.

விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். வேளாண் திருத்தச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் வந்த போது எதிர்த்த கட்சி திமுக. ஆனால் இந்த வேளாண் சட்டங்களை ஆதரித்த கட்சி அதிமுக. அவர்கள் ஆதரிக்கவில்லை எனில் இந்த வேளாண் சட்டமே வந்திருக்காது.விவசாயிகள் பேரணி நடத்திய போது மத்திய அரசு காட்டுமிராண்டிதனமாக விவசாயிகளை நடத்தி இருக்கின்றனர். டிராக்டர்களை அடித்து உடைத்து இருக்கின்றனர். ஒருவர் உயிரிழந்து இருக்கின்றார். இப்படி ஒரு கொடுமை நடக்க காரணமே அதிமுக அரசுதான் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture