கேரளாவிற்க்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்:ஒருவர் கைது

கேரளாவிற்க்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்:ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட அஜ்மல்

காரை சோதனை செய்ததில், கேரளாவிற்க்கு ஒரு டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகளில், ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கும் விதமாக வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததன் பேரில், ஆனைமலை காவல் நிலைய போலீஸார் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் அம்பராம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த மாருதி காரை சோதனை செய்ததில், கேரளாவிற்க்கு ஒரு டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ரேசன் அரிசி மற்றும் மாருதி காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்த அஜ்மல், அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அஜ்மலை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story