17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை : 19 வயது இளம்பெண் போக்சோவில் கைது..!

17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை : 19 வயது இளம்பெண் போக்சோவில் கைது..!
X
சிறுவனை கட்டாயத் திருமணம் செய்ததும், பாலியல் உறவு கொண்டதும் தெரியவந்தது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர்ப்புற பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் 19 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அந்த பெட்ரோல் பங்கிற்கு 17 வயது சிறுவன் ஒருவன் சென்று இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் பிடிக்கும் போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி சிறுவனின் பெற்றோர்களுக்கு தெரியவந்ததால், சிறுவனின் பெற்றோர் புகார் அளித்ததின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் இரு தினங்கள் முன்பு சிறுவனுக்கு ஹிரன்யா ஆபரேஷன் செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு சென்ற பெண் சிறுவனிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி, பழனி கோவிலுக்கு அழைத்துச் சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்பு, வீட்டிற்கு வந்த சிறுவனிடம் பெற்றோர் விசாரித்த பொழுது, அந்த பெண்ணும் தானும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததனர். இந்த புகாரின் பேரில் அந்த பெண்ணிடம் விசாரித்ததில், சிறுவனை கட்டாயத் திருமணம் செய்ததும், பாலியல் உறவு கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.பெரும்பாலும் ஆண்கள்தான் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுவரும் நிலையில், இளம்பெண் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளது பெண்ணியவாதிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா