/* */

உதவித்தொகையை உயர்த்தக் கோரி மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை தெலுங்கானா, புதுச்சேரி போல் ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

HIGHLIGHTS

உதவித்தொகையை உயர்த்தக் கோரி மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
X

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும் சப் கலெக்டர் அலுவலகம் முன்பாக இந்த அமைப்பின் மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை தெலுங்கானா, புதுச்சேரி போல் ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், கடும் ஊனத்திற்கு ரூ. 5 ஆயிரமும் வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊராட்சிகளில் தனிக்குழு அமைத்து அரசாணைப்படி 4 மணி நேர வேலை மற்றும் முழு வேலையை உறுதிப்படுத்த வேண்டும். நீதிமன்றம் மற்றும் ஒன்றிய அரசு உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகள் ரேசன் கார்டுகளை மாதம் 35 கிலோ அரிசி வழங்கும் கார்டுகளாக மாற்றிட வேண்டும். வீடு இல்லா மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் முடிவில் மறியலில் ஈடுபட முயற்சித்த மாற்றுத்திறனாளிகள் 20 பெண்கள் உட்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 14 Dec 2021 9:00 AM GMT

Related News