/* */

பொள்ளாச்சி மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

பொள்ளாச்சியில் உள்ள மருந்து கடைகளில் மருந்துகள் ஆய்வாளர் தலைமையில் திடீரென ஆய்வு நடத்தினர்.

HIGHLIGHTS

பொள்ளாச்சி மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
X

பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமலும், காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி நகர மேற்கு காவல் ஆய்வாளர் மணிக்குமார், பொள்ளாச்சி சரக மருந்துகள் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பொள்ளாச்சி பகுதிகளில் மொத்தம் 11 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து பொள்ளாச்சி சரக மருந்துகள் ஆய்வாளர் ராஜேஷ் கூறுகையில், மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் குருபாரதி அறிவுறுத்தலின் பேரில் பொள்ளாச்சி கோட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. போதை தரும் இருமல் டானிக், மாத்திரைகள், தூக்க மாத்திரைகள், வலி நிவாரண மாத்திரைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. மேலும் கடைகளில் அந்த வகையான மருந்துகள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டன.

இதற்கிடையே மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து சீட்டு வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கூறினார்

Updated On: 14 May 2023 5:49 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வங்க கடலில் புதிதாக உருவாகியது ரீமல் புயல்
  2. க்ரைம்
    காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை துவக்கம்
  3. லைஃப்ஸ்டைல்
    அமுதமான தமிழ் மொழியில் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 30 பேர் கைது
  5. விளையாட்டு
    ஐபிஎல் கிரிக்கெட்: ஆர்சிபி வெளியேறியதை கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்
  6. ஈரோடு
    பவானி எலவமலையில் புகையிலை, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்
  7. லைஃப்ஸ்டைல்
    புது வீடு கட்டிப்பார்ப்போம்..! புன்னகையை சேர்ப்போம்..!
  8. நாமக்கல்
    மாற்றுத்திறனாளிக்காக கட்டப்படும் வீட்டை ஆய்வு செய்த ஈரோடு ஆட்சியர்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் எழுத, படிக்க தெரியாதவர்கள் பற்றி தெரிவிக்க...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் நேரு