கள்ளச்சந்தையில் மது விற்க முயன்ற நபர் கைது: 102 மதுபாட்டில்கள் பறிமுதல்

கள்ளச்சந்தையில் மது விற்க முயன்ற நபர் கைது: 102 மதுபாட்டில்கள் பறிமுதல்
X

மதுபாட்டில்களுடன் கைது செய்யப்பட்ட முருகன்

மதுபாட்டில்கள் வாங்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் பான்மசாலா, குட்கா, போதை வஸ்துகள், கள்ளச் சந்தையில் மது விற்பனை தடுக்கும் விதமாக காவல் துறையினர் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் ஊஞ்சவேலம்பட்டியில் வாகன ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அந்நபர் ஊஞ்சவேலம்பட்டி முருகன் என்பதும், பூசாரிபட்டி பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து முருகனிடம் 102 மதுபாட்டிகள் பறிமுதல் செய்து செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture