பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு
X
இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் மாணவி திடீரென மயக்கம் அடைந்துள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா, பட்டணம் ஊராட்சி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர்கள் செல்லத்துரை மகாலட்சுமி தம்பதியினர்.

இவர்களது மகள் சிவ சுந்தரி சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அவர் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். அவரை ஆசிரியர்கள் நெகமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சை தேவைப்படுவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சிவசங்கரியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சென்ற போது சுந்தரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சுந்தரி பயின்ற பள்ளியிலும் அவரது பெற்றோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா