பொள்ளாச்சி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

பொள்ளாச்சி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது
X

பொள்ளாச்சி காவல் நிலையம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல, மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த ஆறுமாதம் முன்பு 14 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் காதலிப்பதாக கூறி பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பழகி வந்தனர். பின் அந்த வாலிபர் தன் நண்பர்களுக்கு சிறுமியின் பழக்கத்தை கூறியதை அடுத்து மகரஜோதி, நாகராஜ், முத்து முருகன், பிரவீன் மற்றும் இருவர் என ஆறு பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், 5 மாதம் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.

இதை அடுத்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரித்த போலீசார் 6 பேர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததை உறுதி செய்தனர். இதையடுத்து 6 பேர் மீது போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல, மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!