பொள்ளாச்சியில் உயரழுத்த மின்பாதை அமைக்க மின்வாரியம் நடவடிக்கை; மரங்கள் வெட்டி அகற்றம்
![பொள்ளாச்சியில் உயரழுத்த மின்பாதை அமைக்க மின்வாரியம் நடவடிக்கை; மரங்கள் வெட்டி அகற்றம் பொள்ளாச்சியில் உயரழுத்த மின்பாதை அமைக்க மின்வாரியம் நடவடிக்கை; மரங்கள் வெட்டி அகற்றம்](https://www.nativenews.in/h-upload/2023/03/31/1689850-1208822-14199659.webp)
Coimbatore News, Coimbatore News Today - பொள்ளாச்சியில், உயரழுத்த மின்பாதை அமைக்க மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
Coimbatore News, Coimbatore News Today-- பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் நகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. மார்க்கெட் ரோடு நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சீரான குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி கட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மின் இழுவை திறன் அதிகமாக தேவைப்படுகிறது. இதனால் மின் மாற்றியுடன் கூடிய உயரழுத்த மின் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக இடையூறாக உள்ள மரங்கள் வெட்டி அகற்றும் பணி நேற்று நடந்தது. இதையொட்டி அந்த பகுதியில் மின்வினியோகம் தடை செய்யப்பட்டது. மேலும் வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது,
மகாலிங்கபுரத்தில் தரைமட்ட தொட்டி, குழாய் பதித்தல், மோட்டார் பொருத்தல், மின்சார பணி உள்ளிட்ட பணிகளுக்கு சேர்த்து மொத்தம் ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது தரைமட்ட தொட்டி கட்டும் பணி நிறைவு பெற்று உள்ளது. இதைத்தொடர்ந்து கூடுதலாக மின் இழுவை திறன் தேவைப்படுவதால், மின்மாற்றியுடன் கூடிய உயரழுத்த மின் பாதை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக சப்-கலெக்டர் அனுமதி பெற்று, மரங்கள் வெட்டப்படுகின்றன. இதில் 4 மரங்கள் முழுமையாகவும், 4 மரங்களுக்கு கிளைகள் மட்டும் வெட்டப்படுகிறது. இதை தொடர்ந்து மின் வினியோகம் நிறுத்தப்பட்டு மரங்கள் வெட்டும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினா்.
பொதுவாக, ரோட்டோரங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என்பதுதான் நடைமுறை, ஆனால், இதுபோன்ற முக்கிய பணிகளுக்காக, அத்யாவசிய தேவைகளுக்காக அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்று மட்டுமே, மரங்களின் கிளைகள் அகற்றப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே, இடையூறாக உள்ள மரங்கள் முழுமையாக வெட்டி அகற்றப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பச்சை மரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டவோ, சேதப்படுத்தவோ கூடாது எனவும், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu