ஆனைமலை; விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் கவலை
Coimbatore News, Coimbatore News Today- விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் (கோப்பு படம்)
Coimbatore News, Coimbatore News Today. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில், ஆனைமலை ஆனைமலை அருகே விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ஆனைமலை ஒன்றியத்தில் நெல், தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாயம் பிரதானமாக உள்ளது. அதில் 5,400 ஏக்கரில் ஆண்டுக்கு இரண்டு போகத்தில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இதற்கு ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனம், பழைய ஆயக்கட்டு பாசனம் வழியாக தண்ணீர் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் நெல் பயிரிட்டனர். இது தற்போது நெல் அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. மேலும் விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது.
இ்ந்நிலையில், பெரியணை பகுதியில் உள்ள வயல்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து நெற்கதிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது,
இந்த ஆண்டு போதிய அளவில் இடுபொருட்கள் கிடைக்காததன் காரணமாக 2.5 அடி வளரும் நெற்கதிர்கள் 1.5 அடி வரை மட்டுமே வளர்ந்துள்ளது. இதனால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. மேலும் கால்நடைகளுக்கும் வைக்கோல் போன்ற தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பெரியணை உள்ளிட்ட பகுதிகளில் வயல்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து நெற்கதிர்களை சேதப்படுத்துகிறது. இதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும், காட்டுப்பன்றிகள் கட்டுக்கடங்காமல் கூட்டம், கூட்டமாக இரவு நேரங்களில் புகுந்து, நெற்கதிர்களை தொடர்ந்து சேதம் செய்கிறது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே, காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் வராமல் தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆனைமலை பகுதியில் தோட்டங்களில், காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கூட்டமாக வந்து பயிர்களை சேதம் செய்வதால் வனத்துறையினர் இதை தடுக்க வேண்டும் அல்லது காட்டுப்பன்றிகளை சுட அனுமதிக்க வேண்டும் என, விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், சில வேளைகளில் காட்டுப்பன்றி மனிதர்களையே தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால், தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களில், காட்டுப்பாதைகளின் வழியாக வேலைக்குச் செல்லும் பெண் தொழிலாளர்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.
எனவே, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, அதிகாரிகள் தரப்பில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu