தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுத்த பாஜக வேட்பாளர் வசந்தராஜன் உறுதி

தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுத்த பாஜக வேட்பாளர் வசந்தராஜன் உறுதி
X

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன்

தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுத்த பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் உறுதி அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், ’நிற்க வைத்து சொல்லுங்க, என்ன வேணும் கேளுங்க' எனும் தென்னை விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தராஜன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற தென்னை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் மேம்பட வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளிடம் கலந்துரையாடிய வசந்தராஜன், “பொள்ளாச்சி தென்னை விவசாயத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. எங்களது பிரதான வாக்குறுதியாக விவசாயிகளின் வாழ்வாரத்தை மேம்பட வைப்பது தான்.

தற்போது தென்னை மரங்களை தாக்கி வரும் நோய் தாக்குதல், தண்ணீர் பிரச்சினை, தேங்காய்க்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் கண்ணீர் சிந்தும் நிலை உள்ளது. ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகள் ஜெயித்த பின் விவசாயிகள் குறித்து சிறிதும் கவலைப்படுவதில்லை. அந்த நிலை மாற வேண்டும் என்பதால் தான் நிக்க வச்சு சொல்லுங்க, என்ன வேணும் கேளுங்க என்பதை முன்னுறுத்தி எனது பிரச்சாரத்தை விவசாயிகளிடமிருந்து தொடங்குகிறேன். விவசாயிகளுடன் ஒருவனாக இருந்து அவர்களின் சிரமங்களை கேட்டு அருந்தி மத்திய அரசு மூலமாக பெற்று தருவதே எனது குறிக்கோள். கயிறு தொழிற்சாலைகள், ஆனைமலை நல்லாறு திட்டம், பாரத் அரிசி என்பது போல பாரத் தேங்காய் எண்ணெய் விற்பனையை கொண்டு வந்து, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட பாடுபடுவேன். அப்படி இல்லை என்றால் எங்களை கேள்வி கேட்க அனைத்து உரிமையும் விவசாயிகளுக்கு உள்ளது” எனக் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!