பொள்ளாச்சியில் 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் : அதிமுக வேட்பாளர்

பொள்ளாச்சியில் 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் : அதிமுக வேட்பாளர்
X

கார்த்திகேயன்

பொள்ளாச்சியில் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக சார்பில் பொள்ளாச்சியில் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் அவரது வீட்டில் பேட்டி அளிக்கும் போது, தனது தந்தை அப்புசாமி மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் வழியில் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியும் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் ஆகவும் இருந்துள்ளார்.

அவரது மறைவுக்குப் பிறகு தான் வெளிநாட்டிலிருந்து திரும்பி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு, தற்போது மேற்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருவதாகவும், மேலும் தனது மனைவி சாந்தி ஆனைமலை ஒன்றிய குழு தலைவராகவும் பணியாற்றி வருகிறார் என தெரிவித்தார்.

அதிமுக சார்பில் இருந்த எம்பி மகேந்திரன் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சிறப்பாக பணியாற்றினர். ஆனால் திமுக எம்பி சண்முகசுந்தரம் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என திமுக கட்சி நிர்வாகிகளை தெரிவிக்கின்றனர்.

பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தென்னை நார் தொழிற்சாலை மற்றும் கொப்பரை விலை ஏற்றம் என பல்வேறு திட்டங்கள் பொதுமக்களுக்கு நிறைவேற்றப்படும் எனவும், அதிமுக 40க்கு 40 வெற்றி பெற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வெற்றிக் காணிக்கை தருவோம் எனவும் தெரிவித்தார்.

தனக்கு எம் பி சீட் பரிந்துரை செய்த கோவை தெற்கு மாவட்ட செயலாளர் அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்பி வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, கிணத்துக்கடவு தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தேர்தலில் இரண்டு லட்சம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!