ஊரடங்கு விதிமீறல் நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு நிறுத்தம், வழக்கு பதிவு

ஊரடங்கு விதிமீறல்  நடிகர் சிவகார்த்திகேயன்  படப்பிடிப்பு நிறுத்தம், வழக்கு பதிவு
X

டான் படப்பிடிப்பை காண திரண்ட கூட்டம்

கோவை ஆனைமலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படப்படிப்பு கொரோனா விதி மீறியதாக நிறுத்தப்பட்டு, அபராதம் விதித்து,வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

கோவையில் குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்புகள் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நோய் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஆற்றங்கரை பகுதியில் நேற்று சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.

ஆனைமலை மேம்பால பகுதியில் நேற்று சிவகார்த்திகேயன் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையறிந்த அப்பகுதி மக்கள் நடிகர் சிவகார்த்திகேயனை காண்பதற்காகவும், படப் பிடிப்பபை காண்பதற்காகவும் திரண்டனர். அப்பகுதியில் குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை நூற்றுக்கணக்கான பொது மக்கள் திரண்டனர்.

பெரும்பாலானவர்கள் முக கவசம், அணியாமலும் தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் படப் பிடிப்பை காண்பதில் ஆர்வமாக நின்று கொண்டு இருந்தனர்.

இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் படப்பிடிப்பு நடத்துபவர்கள் வாகனங்களை அப்பகுதியில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆனைமலை காவல் துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் படப் பிடிப்பை நிறுத்தினர்.

இதையடுத்து வருவாய்த் துறையினர் அனுமதி இல்லாமல் படப் பிடிப்பு நடத்திய டான் படக்குழுவினருக்கு 19,400 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்நிலையில் திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட டான் படக்குழுவினர் 31 பேர் மீது ஆனைமலை காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொற்று தடை உத்திரவிற்கு கீழ்படியாமை, தொற்றுநோயை கவனக்குறைவாக பரப்பும் செயல், தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதே சமயம் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா மோகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!