பொள்ளாச்சி பாலியல் வழக்கு : மேலும் 3 பேர் கைது

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் கைதான 5 பேர்களின் நண்பர்களான பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேரை நேற்று விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். விசாரணை முடிவில் பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியை சேர்ந்த அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் (34), பாபு (27), ஆட்சிப்பட்டியை சேர்ந்த ஹேரேன்பால் (29) ஆகியோரை சிபிஐ போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india