பொள்ளாச்சி: ஊரடங்கை மீறி மாட்டுச்சந்தை - ரூ.10,000 அபராதம்
பொள்ளாச்சியில், மாட்டுச்சந்தை நடத்தியவர்களை அப்புறப்படுத்திய காவல்துறையினர்.
கொரோனா தொற்றின் காரணமாக, கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மளிகைக்கடைகள், ஹோட்டல்கள், மருந்தகங்கள் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மாட்டுச்சந்தைக்குப் பெயர் பெற்ற பொள்ளாச்சியில், இன்று மாட்டு வியாபாரம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாடுகள், எருமைகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவை கொண்டு வரப்பட்டன. தமிழகம் மற்றும் கேரளா வியாபாரிகளுக்கு மாட்டு விற்பனையில் ஈடுபட்டனர்.
வியாபாரிகள் பெருமளவில் கூட்டம் கூடியதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களால் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து அந்த இடத்தில் உள்ள லாரிகளுக்கு மாடுகளை கொண்டு வந்த வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறையினர் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu