மாட்டுவண்டியில ஒரு ஜோடி வந்திருக்கு..! இது கோவை கல்யாணம்..!

மாட்டுவண்டியில ஒரு ஜோடி வந்திருக்கு..! இது கோவை கல்யாணம்..!
X

கோவையில் நடந்த திருமணத்தில் புதுமணத் தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்து மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்றனர்.

கோவையில் நடந்த திருமணத்தில் அந்த திருமண ஜோடி பக்காவாக பிளான் பண்ணி மாட்டுவண்டியில் பயணம் செய்தது பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.

கோவையில் நிகழ்ந்த திருமணம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்னதான் இந்த புதுமணத்தம்பதி செய்துவிட்டார்கள் என்று நீங்கள் குழப்பிக்கொள்வது தெரிகிறது. தொடர்ந்து படிங்க.

இந்த புதுமண தம்பதிகளுக்கு பொதுமக்கள் வாழ்த்துகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வு என்பது திருமணம்தான். அதனால்தான் கல்யாணம் என்று வந்துவிட்டால் கஷடப்படுகிறவர்கள் கூட கடன்வாங்கியாவது சிறப்பாக நடத்துவார்கள்.

வசதியில்லாதவர்களே கல்யாணத்தை தடல் புடலாக நடத்தும்போது வசதி படைத்தவர்களின் ஆடம்பரத்தை சொல்லவே வேண்டாம். வகைவகையான ஆடைகள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் என கண்கொள்ளா காட்சியாக இருக்கும். . மணமக்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவதும், சாரட் வண்டிகளில் ஊர்வலமாக போவதும் குதிரை நடனம் ஆடி வரவேற்பதும் என எத்தனையோ அமர்க்களமான திருமணங்களை நாம் கண்டுள்ளோம்.

இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது மாட்டு வண்டி ஊர்வலம்தான்.. இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும்வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசைகளை வைத்து ஊர்வலம் செல்வது அதிகரித்து வருகிறது.. சில நாட்களுக்கு முன்புகூட, மதுரை உசிலம்பட்டியில் ஒரு காதணி விழா நடந்து, சுற்றுவட்டார மக்களையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது..

வழக்கமாக, கிராமங்களில் மாட்டுவண்டிகளில்தான் சீர்வரிசைகளை தாய்மாமன்கள் கொண்டுசெல்வார்கள்.. ஆனால், இந்த தாய்மாமன் சற்று வித்தியாசமாக, கன்டெய்னர் லாரியில் சீர்வரிசைகளை கொண்டு வந்திருந்தார்.

இதோ இப்போதும் ஒரு புதுமண தம்பதியினர், ஒரே நாளில் கோவையை திரும்பி பார்க்க வைத்துவிட்டனர். நேற்றைய தினம் முகூர்த்த நாள் என்பதால், கோவை ஈச்சனாரி கோயிலில் பல திருமணங்கள் நடைபெற்றன.. இதில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், பவதாரணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.. இரு வீட்டு குடும்பத்தினரும் திரண்டு வந்து இந்த திருமணத்தை அமர்க்களப்படுத்தியிருந்தனர்.

திருமணம் முடிந்ததுமே, வித்தியாசமான முறையில் ஊர்வலம் செல்ல தம்பதிகள் முடிவு செய்திருந்தது நமக்கெல்லாம் எப்படித் தெரியும்? நாம் ஏதாவது அலங்கரிக்கப்பட்ட வாகனம் வந்து நிற்கும் என்று எதிர்பார்த்து நின்றால், திடீரென ஒரு மாட்டு வண்டி வந்து, மண்டபத்தின் முன்பு நின்றது. புதுமணப் தம்பதிகள் இந்த மாட்டு வண்டியை பார்த்துமே, குதூகலமாகி கும்மாளமிட்டனர். இருவருமே மகிழ்ச்சியுடன் அதில் ஏறி உட்கார்ந்து கொண்டனர்.

மாப்பிள்ளை வீடு நோக்கிப் பயணம் :

மாப்பிள்ளையின் வீடு, செட்டிபாளையத்தில் இருந்ததால், ஈச்சனாரி கோயிலிலிருந்து மாட்டுவண்டியிலேயே சென்றனர். மாட்டு வண்டியில் புதுமண தம்பதியினரை பார்த்த, ரோட்டில் வாகனங்களில் சென்றவர்கள் எல்லாருமே ஆச்சரியமாக பார்த்தார்கள். சும்மா விடுவார்களா என்ன? அவர்களும் ஆர்ப்பரித்து கையசைத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அவர்கள் மாட்டுவண்டியில் சென்ற வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையவாசிகளும் புதுமண தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

பொதுமக்கள் வரவேற்பு

இப்போதெல்லாம் ப்ரீவெட்டிங் ஷூட்டிங், போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட், என்ற பெயரில் ஆடம்பர வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த மாட்டுவண்டி பயணம் புதுமணத் தம்பதிக்கு சிறப்பான பேரை வாங்கிவைத்துவிட்டது.

பாரம்பரிய முறையில் மாட்டுவண்டியில் மணமக்கள் ஊர்வலம் செல்ல முடிவெடுத்தது பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த இணைப்பில் தம்பதிகள் மாட்டுவண்டியில் பயணம் செய்த வீடியோ உள்ளது.

ttps://youtu.be/8Srkb0YJRSQ

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி