வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மீட்பு!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மீட்பு!
X

Coimbatore News- மீட்கப்பட்ட கார் 

Coimbatore News- கோவையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மீட்கப்பட்டது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டத்தில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள மத்தம்பாளையம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கன மழையின் காரணமாக கோட்டை பிரிவிலிருந்து ஒன்னிபாளையம் செல்லும் சாலையில், ரயில்வே பாலத்தின் கீழுள்ள ஏழெருமை பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் இரண்டு கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காருக்குள் இருந்தவர்களை மீட்டு பத்திரமாக மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். நேற்று தண்ணீர் அதிகளவு சென்றதால் கார்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை பள்ளத்தில் தண்ணீரின் அளவு குறைந்ததால், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் காரை மீட்டனர்.

மற்றொரு கார் தண்ணீரில் இருந்து தள்ளி நிறுத்தப்பட்டது. இதனால் ரயில்வே பாலத்தின் கீழ் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. மழை அதிகளவில் பெய்யும் போது பள்ளத்தில் வாகனங்கள் சிக்கிக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது எனவும், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், கிடப்பிலே போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்