நீலகிரி மலை ரயில் போக்குவரத்து துவக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரி மலை ரயில் போக்குவரத்து துவக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
X

நீலகிரி மலை ரயில்.

நீலகிரியில் 4 மாதத்திற்குப்பின் மலை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வரை மலை ரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி இன்ஜின் மூலமும், குன்னூர் – உதகை இடையே டீசல் இன்ஜினில் இயக்கப்படுகிறது.

கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை ரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளையும் நீலகிரி மலை ரயில் கவர்ந்து வருகிறது.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மலை ரயில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் துவங்கியுள்ளது. 4 மாதங்களுக்குப் பிறகு மலை ரயில் தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்துள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்த கட்டணமே தொடரும் எனவும், முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

இதன்படி இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு கிளம்பிய மலை ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா