போதையில் மகளின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தாய் கைது

போதையில் மகளின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தாய் கைது
X
கோவையில், மது போதையில் மகளின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் காரமடை கணுவாய்ப்பாளையம் பகுதியில் வசிப்பவர் நாகமணி. அவரது கணவர் இறந்த நிலையில், மகள் மகாலட்சுமியுடன் வசித்து வந்தார். மகாலட்சுமிக்கு சோமையனூரை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கும் திருமணம் நடந்து 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சரவணகுமார் , சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

சரவணகுமார் இறந்த பின், செல்போனில் பேசிக் கொண்டு, குழந்தைகளை மகாலட்சுமி சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அவரது மாமியர் துளசிமணி, தன்னுடைய பேரக் குழந்தைகளை தானே வளர்ப்பதாக கூறி மகாலட்சுமியை கண்டித்து வீட்டைவிட்டு அனுப்பி விட்டார்.

தனது தாயார் வீட்டிற்கு வந்த மகாலட்சுமி, அங்கும் செல்போனில் பேசுவதை விடவில்லை; இதனால், மகள் மகாலட்சுமிக்கும், தாய் நாகமணிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்தது. இருவருக்கும் குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது.

நேற்றிரவு, மதுபோதையில் இருந்தபோது, இருவக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இருவரும் படுத்துள்ளனர். எனினும், ஆவேசத்தில் இருந்த நாகமணி, இன்று அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகள் மகாலட்சுமி தலையில் ஆட்டுக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை காவல் துறையினர், சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக தாய் நாகமணியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil