/* */

மேட்டுப்பாளையத்திற்கு உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு

மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது

HIGHLIGHTS

மேட்டுப்பாளையத்திற்கு  உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு
X

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் மைதானம் பகுதியில் ஏராளமான உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்தும், உத்தரபிரதேசம்,குஜராத், கர்நாடகா மாநிலம் கோலார், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் உருளைக்கிழங்குகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதனை வியாபாரிகள் ஏலம் முறையில் எடுத்துச் சென்று விற்பனை செய்வது வழக்கம்.

இந்த உருளைக்கிழங்கு மண்டிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் போதிய சீசன் இல்லாத காரணத்தால் தற்போது ஒரு நாளைக்கு தலா 10 டன் எடையுள்ள 4 முதல் 6 லோடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

மேலும்,உத்தரப்பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தலா 15 முதல் 20 டன் எடையுள்ள சுமார் 25 லோடு உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து தலா 15 முதல் 20 டன் எடையுள்ள சுமார் 20 லோடு உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.

தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் 45 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1500 க்கும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் உருளைக்கிழங்குகள் 45 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.750 முதல் 850 வரை விற்பனையாகிறது. இதனால் ஊட்டி உருளைக் கிழங்குகளின் விலை அதிகமாகவும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகளின் விலை குறைவாகவும் விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஊட்டியில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் விளைச்சல் குறைவாக இருந்தாலும் போதுமான விலை கிடைப்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Updated On: 13 May 2023 12:23 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  2. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  3. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  5. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  6. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  8. திருவள்ளூர்
    சுரங்கப் பாதை அமைக்கக் கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக வந்த...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்