மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்  போராட்டம்
X

மேட்டுப்பாளையம் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தினசரி சேகரமாகும் குப்பைகள், தூய்மைப்பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, சிறுமுகை சாலையில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகளில் 70 நிரந்தர பணியாளர்களும், 131 ஒப்பந்த பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தி வருகிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துப்புரவுத்தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதி செயலாளர் தொல்குடி.மைந்தன் தலைமையில் தூய்மைப்ப ணியாளரை ஆட்குறைப்பு செய்யக்கூடாது, உரிய ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த நகல் வழங்க வேண்டும், தூய்மைப்பணிக்கான கையுறை, மண்வெ ட்டி, கடப்பாரை, முகக்கவ சம் உள்ளிட்ட உபகரண ங்களை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது மேட்டுப்பாளையம் நகராட்சி பொறியாளர் சோம சுந்தரம், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் சுகாதார அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணி யாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது உரிய ஊதியம் வழங்கப்படும், ஆட்குறைப்பு செய்யப்படாது, தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. எனவே தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களில் 4 பேரை தனியார் நிறுவனம் பணிநீக்கம் செய்து உள்ளது. எனவே மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும், தொழிலாள ர்களுக்கு தேவையான உபகரணங்களை உடனடி யாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 114 ஒப்பந்த தூய்மைப்பணி யாளர்கள் நேற்று காலை முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் ஒப்பந்ததாரர் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மேட்டுப்பாளையத்தில் ஒப்பந்த தூய்மைப்ப ணியாளர்கள் 2-வது நாளாக இன்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு, தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags

Next Story