மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தையை பிடிக்க மேலும் ஒரு கூண்டு
சிறுத்தைக் கூண்டு - கோப்புப்படம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் கெம்மாரம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளும் உள்ளது. இந்த ஊராட்சிள் அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளது.
இதனால் அடிக்கடி யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்கள், குடியிருப்புகளை சேதப்ப–டுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, நாய் உள்ளிட்டவற்றை சிறுத்தை ஒன்று அடித்து கொன்றுள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து ஆடு, மாடுகளை அடித்து கொன்று வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரி இறந்த கன்றுக்குட்டியின் உடலுடன் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காரமடை-வெள்ளியங்காடு சாலையில் தாயனூர் பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தோலம்பாளையம் அடுத்துள்ள தோகைமலை வனப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க ஒரு கூண்டு வைக்கப்பட்டு, அதில் ஆட்டுக்குட்டி ஒன்றும் கட்டி வைக்கப்பட்டது. தற்போது ஆதிமாதையனூர் பகுதி மக்களின் அச்சம் காரணமாக மீண்டும் ஒரு கூண்டு அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
தோலம்பாளையம் அருகே உள்ள தோகைமலை வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கூண்டின் மேல் போடப்பட்டிருந்த இலை மற்றும் சருகுகள் தற்போது காய்ந்து விட்டது. மேலும், கட்டப்பட்டுள்ள ஆட்டுக்குட்டிக்கு முறையான தீவனமோ, தண்ணீரோ வைக்கப்படவில்லை என்ற குற்றச்சா்டு எழுந்துள்ளது.
தொடர்ந்து விளைநிலங்களை சேதப்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனை வலியுறுத்தி வரும் 31ம் தேதி காரமடையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu