தண்ணீர் தொட்டியில் மூழ்கி அக்கா- தம்பி தற்கொலை

தண்ணீர் தொட்டியில் மூழ்கி அக்கா- தம்பி தற்கொலை
X
கோவை அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி அக்கா, தம்பி தற்கொலை. நாங்களாகவே தான் வீட்டை விட்டு செல்கிறோம் என்று கடிதம் எழுதி சென்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் பெரியநாய்க்கன்பாளையம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அலமேலு. இவருக்கு ஐடி ஊழியரான அருண்குமார்(25) என்ற மகனும், மனநலம் பாதிக்கப்பட்ட பிரீத்தா(30) என்ற மகளும் உள்ளனர். கணவர் பரமேஸ்வரன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் மற்றும் பிரீத்தா இருவரும் வீட்டில் இல்லாததால் அலமேலு நீண்ட நேரம் தேடிய நிலையில் நாங்களாகவே தான் வீட்டை விட்டு செல்கிறோம் என்ற கடிதம் ஒன்று அலமேலுவிற்கு கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து அலமேலு பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரினை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் இருவரையும் அவர்களது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்டனர். ஏற்கனவே கடன் பிரச்சனையில் இருந்த இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருவரின் உடலை மீட்ட காவல்துறையினர் தொடர் விசாரணையில் செய்து வருகின்றனர். சகோதர சகோதரி இருவரும் வீட்டு தொட்டியில் மூழ்கி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!