கோவை ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத பெண் ரயில் விபத்தில் உயிரிழப்பு

கோவை ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத பெண் ரயில் விபத்தில் உயிரிழப்பு
X

Coimbatore News- ரயில் மோதி  பெண் உயிரிழப்பு ( மாதிரி படம்)

Coimbatore News- கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற விரைவு ரயிலில் பெண் ஒருவர் அடிபட்டு உயிரிழந்தார்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பல்வேறு ரயில்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் போத்தனூர் ரயில் நிலையம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தின் அருகே தண்டவாளத்தில் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று மதியம் 2 மணி அளவில், கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்து உள்ளார்.

இறந்த பெண்ணின் உடலில் பச்சை நிற சுடிதார் மற்றும் மஞ்சள் நிற பேண்ட் அணிந்து இருந்தது. அவரது முகம் சிவப்பு நிறத்தில் வட்டமாக இருந்தது. மேலும், இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் இருந்தது என்று காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் மங்கையர்க்கரசி இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இறந்த பெண்ணின் அடையாளம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்பதால், பொதுமக்களின் உதவியை காவல் துறை நாடி உள்ளது. இந்த பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 0422-2300043 என்ற எண்ணில் கோயம்புத்தூர் ரயில்வே காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு காவல் துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!