கொரோனா தடுப்பூசி முகாம் - நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

கொரோனா தடுப்பூசி முகாம் - நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
X

நஞ்சுண்டாபுரம் தடுப்பூசி மையத்தில் காத்திருந்த மக்கள்

கோவையில் உள்ள தடுப்பூசி முகாம்களில், ஊசி செலுத்திக் கொள்வதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் இன்று, 25750 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றது. மாநகராட்சி பகுதியில் 40 மையங்களில் தலா 350 ஊசிகள் வீதம் 14 ஆயிரம் பேருக்கும், ஊரகப்பகுதிகளில் 47 மையங்களில் தலா 250 ஊசிகள் வீதம் 11750 பேருக்கும் தடுப்பூசி போடப்படுகின்றது. ஊரகப்பகுதிகளில் இன்று கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட வில்லை.

கோவை மாநகராட்சி பகுதியில் 10 மையங்களில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் தவணை கோவேச்சின் தடுப்பூசி செலுத்த படுகின்றது. கடந்த சில தினங்களாக கோவையில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக நள்ளிரவு முதலே தடுப்பூசி மையங்கள் முன்பு பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் இருந்தது. இதனை தவிர்க்கும் வகையில் காலை 8 மணிக்கு பிறகே தடுப்பூசி செலுத்தும் மையங்கள் மற்றும் தடுப்பூசி எண்ணிக்கை குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.

இருப்பினும், கோவையில் உள்ள பெரும்பாலான தடுப்பூசி மையங்களில் அதிகாலை முதலே பொதுமக்கள் தடுப்பூசி மையங்கள் முன்பு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திரண்டு வருகின்றனர். குறிப்பாக கோவை நஞ்சுண்டாபுரம் நாடார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் காலை முதலே சுமார் 300க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக காத்திருந்தனர். காலை 10 மணிக்கு பிறகு தடுப்பூசி மையங்களில் டோக்கன் வழங்கும் பணியைத் தொடங்கியது. தடுப்பூசி எண்ணிக்கைக்கு ஏற்ப டோக்கன் வழங்கப்பட்டு 11 மணிக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி இருக்கிறது.

Tags

Next Story