கேரளா எல்லைகளில் அலட்சியம்: ஒமைக்ரான் பரவும் அபாயம்

கேரளா எல்லைகளில் அலட்சியம்: ஒமைக்ரான் பரவும் அபாயம்
X

தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையார் பகுதி.

கேரளா மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் கேரளா மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து கேரள மாநிலம் ஏர்ணாகுளம் வந்த பயணி ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதன்படி இந்தியாவில் ஒமைக்ரான் வைரசின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

கொரொனா அதிகமாக பரவிய போது ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் அல்லது இரு முறை கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரளாவில் இருந்து, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரொனா தொற்று குறைந்த நிலையில் இரு மாநிலங்கள் இடையேயும், பேருந்து போக்குவரத்து தொடங்கியது. கேரளாவில் இருந்து வாளையார் வழியாக தமிழக பகுதிக்குள் வருபவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறையினர் ஒருவர் கூட இல்லை. இரு காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். கொச்சி விமான நிலையத்திலேயே பயணிகளுக்கு ஒமைக்கரான் பரிசோதனை செய்யப்படுவதால், மாநில எல்லைகளை சுகாதாரத்துறையினர் கண்டு கொள்ளாமல் இருக்கலாம் என கருதப்படுகின்றது. கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் சுகாதாரத்துறையினர் எல்லையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!