கோவை: மகனை சுத்தியால் அடித்து கொலை செய்த தந்தை போலீசில் சரண்

கோவை: மகனை சுத்தியால் அடித்து கொலை செய்த தந்தை போலீசில் சரண்
X

பாக்கியநாதன்

கோவை பேரூர் அருகே, மகனை சுத்தியால் அடித்து கொலை செய்த தந்தை, போலீசில் சரணடைந்தார்.

கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியநாதன் (62). இவர் பேரூர் செட்டிபாளையம் சாலையில் இரண்டு வருடமாக உணவகம் நடத்தி வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக ஹோட்டலுக்கு உண்டான வாடகை கொடுக்க முடியாததால், அந்த இடத்தின் உரிமையாளர் கணேஷ் என்பவர் கடையை காலி செய்யுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து இன்று கடையை காலி செய்வதற்காக பொருட்களை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது பாக்கியநாதனுக்கும், மதுபோதையில் இருந்த அவரது மகன் சபரிநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடையை தன்னைக் கேட்காமல் ஏன் காலி செய்கிறாய் என்று கேட்டு இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சபரிநாதன் அவரது தந்தை பாக்கியநாதனை, கையால் அடித்து கீழே தள்ளி விட்டுள்ளார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் கோபத்தில் இரும்பு சுத்தி மற்றும் மூங்கில் கம்பால் அடித்துள்ளார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த சபரிநாதன், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பாக்கியநாதன். பேரூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தனக்கும் தனது மகனுக்கும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், தான் அடித்ததில் மகன் உயிரிழந்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர். சபரிநாதன் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாக்கியநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி