காய்கறி மாலை, மண்வெட்டி, அடுப்புடன் நூதன வேட்புமனு தாக்கல்

காய்கறி மாலை, மண்வெட்டி, அடுப்புடன்    நூதன வேட்புமனு தாக்கல்
X
கையில் அடுப்பு, காய்கறி மாலையுடன் சுயேச்சை வேட்பாளர் நூதன வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கோவை சுந்தராபுரம் பகுதியைச்சேர்ந்தவர் நூர் முகமது (63). 5ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் சுயதொழில் செய்து வருகிறார். கடந்த 1996 ம் ஆண்டு முதல் வார்டு கவுன்சிலர், எம். எல் ஏ , எம்.பி என இதுவரை 35 தடவை தேர்தலில் நின்று குறைவான வாக்குகளே பெற்றுள்ளார். ஆண்டிப்பட்டி, சாத்தான் குளம் , திருச்செந்தூர், மதுரை மேற்கு , பென்னாகரம், ஆர் கே நகர், திருமங்கலம் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.

தற்போது 36 -வது முறையாக கோவை கிணத்துக்கடவு தொகுதி சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்ய காய்கறி மாலை, மண்வெட்டி , மண் அடுப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லியுடன் வந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ள பகுதிக்கு வந்ததும் காவல் துறையினர் காய்கறி மாலை, மண்வெட்டி, மண் அடுப்பை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மதுக்கரை தாசில்தார் அலுவலகத்திலுள்ள தேர்தல் அலுவலர் அம்சவேணியிடம் வேட்பு மனுவை நூர் முகமது வழங்கினார்.

விவசாயிகள் டெல்லியில் போராடிய போது, அரசு ஒன்றும் செய்யவில்லை எனவும், கேஸ் விலையேற்றத்தை கண்டித்தும் , இப்படி வந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து தோற்றாலும் மக்களிடம் மாற்றத்தை கொண்டு வருவதற்காக போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்