வயநாடு மீட்பு பணிக்காக மீட்பு வாகனங்களை அனுப்பி வைத்த கோவை மாநகராட்சி

வயநாடு மீட்பு பணிக்காக மீட்பு வாகனங்களை அனுப்பி வைத்த கோவை மாநகராட்சி
X

Coimbatore News- மீட்பு வாகனங்களை அனுப்பி வைத்த கோவை மாநகராட்சி

Coimbatore News- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வயநாடு மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. வயநாடு மீட்பு பணிக்காக மீட்பு வாகனங்களை அனுப்பி வைத்தது கோவை மாநகராட்சி.

Coimbatore News, Coimbatore News Today,- கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் இராணுவமும் ஈடுபட்டு வருகிறது. வயநாட்டில் நிலச்சரிவால் பேரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து அனைத்து வகையிலும் உதவி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் 5 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்ட அவர், மீட்பு பணிகளுக்காக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளையும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனிடையே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வயநாடு மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவையில் இருந்து மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்தும் 5 ஹிட்டாச்சி வாகனங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் பத்து freezer box கள் முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டன. கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் இருந்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்