கோவை வெள்ளலூர் குளக்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா
பட்டாம்பூச்சி பூங்காவின் முகப்பு தோற்றம்.
கோவை வெள்ளலூர் பகுதியில் 90 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளம் கடந்த 2017ம் ஆண்டு தூர்வாரப்பட்டு குளக்கரையை ஒட்டிய பகுதிகளில், மியாவாக்கி முறையில் மரங்கள் வளர்க்கப்பட்டன. இதன் காரணமாக பட்டாம்பூச்சிகளின் வருகை அதிகரித்த நிலையில், இந்த குளக்கரையில் 300 மீட்டர் அளவிற்கு பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தனியார் பங்களிப்புடன் 66 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைத்துள்ளனர்.இந்த பட்டாம்பூச்சி பூங்காவில் 103 வகையான பட்டாம்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 31% பட்டாம்பூச்சிகள் இப்பகுதியில் உள்ளது.
இந்த பூங்காவில் 18 அடி உயர பட்டாம்பூச்சி வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டு பட்டாம்பூச்சிகள் பற்றிய குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோவையில் நீர் மேலாண்மைக்காக திட்டம் வகுத்த மன்னரான வீர ராஜேந்திரன் பற்றிய குறிப்புகளும் தமிழர்கள் நீர் மேலாண்மைக்காக செய்த பல்வேறு குறிப்புகளும் ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி 200 வகையான பூச்செடிகள், 270 மர வகைகள் உள்ளன. கோவை மாநகரில் பல்வேறு பொழுதுபோக்கு இடங்கள், பூங்காக்கள் இருந்தாலும் இந்த பட்டாம்பூச்சி பூங்கா மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையிலும் பட்டாம்பூச்சிகள் பற்றி பலவகையான தகவல்களை அறிந்து கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu