வேளாண் திருத்தச் சட்ட நகல் எரிப்பு - விவசாயிகள் போராட்டம்

வேளாண் திருத்தச் சட்ட நகல் எரிப்பு - விவசாயிகள் போராட்டம்
X
மத்திய அரசு மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை விவசாயிகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றியது.

மத்திய அரசு மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை விவசாயிகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றியது. இதனை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு போராட்டங்களை தீவிரப்படுத்த முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இன்று வேளாண் சட்ட நகல்களை எரிக்கும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. இதன் தொடர்ச்சியக கோவை மாவட்டத்தில் பரவலாக மத்திய அரசை கண்டித்து வேளாண் சட்ட நகல்களை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமனோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india