கோவையில் பரவும் ஆந்த்ராக்ஸ்? யானை பலியானதால் கால்நடைகளுக்கு தடுப்பூசி தீவிரம்
ஆனைகட்டியில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில், சேம்புகரை என்ற இடத்தில் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிர் இழந்து கிடந்தது. அதன் வாய் மற்றும் ஆசன வாய் பகுதிகளில் இருந்து ரத்தம் வெளியேறி இருந்தது. இது ஆந்த்ராக்ஸ் அறிகுறி என்பதால், யானையின் இரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையில், யானைக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து முழு கவச உடை அணிந்து வன ஊழியர்கள், யானையின் உடல் மீது பார்மலின் ரசாயனதை ஊற்றினர். பின்னர் யானையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதனிடையே, ஆந்த்ராக்ஸ் தொற்றால் யானை உயிரிழந்தது குறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சேம்புக்கரை வனப்பகுதியை சுற்றி எட்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போட உத்திரவிடப்பட்டது.
உடனடியாக, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை துவங்கினர். முதல் கட்டமாக அணைமேடு பகுதியில், 250 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ச்சியாக யானை இறந்து இருந்த இடத்தை சுற்றி இருக்கக் கூடிய மற்ற கிராமங்களில், கால்நடைகளுக்கு தடுப்பூசி கூடுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் பாதித்து யானை பலியானது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu